Friday, August 6, 2010

நமது தேசத்தின் அவலங்கள்

நமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்!



1. அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6. நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!




இந்த நிலை மாறுவது எப்போது?

Monday, July 26, 2010

லால்பேட்டை மதரசா பட்டமளிப்பு விழா

ஜாமிஆ மன்பவுல் அன்வார் 66 - ஆண்டு பட்டமளிப்பு விழா

Posted by லால்பேட்டை . காம் at 7/09/2010 09:24:00 AM
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 66 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் ஜாமியா தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெறும்.

தலைமை அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம்,அவர்கள்,

வரவேற்புரை ஹாஜி A.M.ஜாஃபர். அவர்கள்,

சனது {பட்டம்}வழங்குபவர்,
ஷைகுல் ஜாமியா முஃப்தி அல்லாமா அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹள்ரத்.அவர்கள்,

வாழ்த்துரை தாருல் யூசுபிய்யா அரபுக்கல்லூரி முதல்வர்

மவ்லானா மவலவி அல்ஹாஜ் கலீல் அஹ்மது ஹள்ரத்,மன்பஈ

சென்னை அடையார் பெரியபள்ளிவாசல் தலைமை இமாம்
அல்ஹாஜ் M. சதீதுத்தீன் ஹள்ரத்.

மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் ஜாமிஆ பேராசிரியர்
மவ்லானா மவலவி ஷைகுல் ஹதீஸ்

அல்ஹாஜ் A.E. முஹம்மது அப்துல் ரஹ்மான் ஹள்ரத்,

மவ்லானா மவலவி ஷைகுல் ஃபிக்ஹ் அல்ஹாஜ் S.A. அப்துர் ரப்,ஹள்ரத்

மவ்லானா மவலவி அல்ஹாஜ் P.S. அப்துல் அலி, ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் காரி அல்ஹாஜ் R.Z. முஹம்மது அஹ்மது,ஹள்ரத்

மவ்லானா மவலவி S.A. சைபுல்லாஹ்,ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் M. முஹம்மது காஸிம்,ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் J ஜாகிர் ஹுஸைன்,ஹள்ரத்

மவ்லானா மவலவி அல்ஹாஜ் V.R. அப்துஸ் ஸமது,ஹள்ரத்

மவ்லானா மவலவி அல்ஹாஃபிழ் A.N. காமில் ஷஃபீ,ஹள்ரத்,

மற்றும் உலாமாகள் மார்க்க அரிங்கர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள்.

நன்றியுரை ஜாமிஆ பொருளாளர் அல்ஹாஜ் A.J.அஹமதுல்லாஹ்,BE.



மல்லவி ஃபாஜில் ஸனது {பட்டம்} பெறுபவர்கள்,



மவ்லவி ஃபாஜில் ஹாஃபிள் M. சையிது முஹம்மது மன்பஈ, புதுவிடுதி,ரெகுநாதப்ரம் புதுகை மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் ஹாஃபிள் N. நஸ்ருத்தீன் மன்பஈ,
லப்பைக்குடிக்காடு பெரம்பலூர் மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் M. இர்பானுல்லாஹ் மன்பஈ,
ரம்ஜான்தைக்கால் கா.ம.குடி.கடலூர் மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் A. ஹஜ்ஜி முஹம்மது, மன்பஈ,
ரம்ஜான்தைக்கால் கா.ம.குடி.கடலூர் மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் A.S.ஷாஹுல் ஹமீது,மன்பஈ,
பிளியங்குளம்,மதுரை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஸனது {பட்டம்}பெறுபவர்கள்,


மவ்லவி ஆலிம் A.முஹம்மது ஜீலானி, மன்பஈ,
கண்டாச்சிபுரம் விழுப்புரம் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.நஜ்முத்தீன் அஹ்மது, மன்பஈ,
பாலக்கரை திருச்சி 8

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.ஜுபைர் அஹ்மது,மன்பஈ,
கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் R. முஹம்மது அலி ஜின்னா, மன்பஈ,
உலகாபுரம் விழுப்புரம் மாவட்டம்
மவ்லவி ஆலிம் M. முஹம்மது ஹுசைன்,மன்பஈ,
கல்மேடு,மதுரை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் K.E. அப்துர் ரஹீம்,மன்பஈ, கல்மேல்குப்பம்,வேலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M.I.ஷேக் முஹம்மது,மன்பஈ,
புரப்பணிப்ப்த்தூர், சென்னை மாவட்டம்

மவ்லவி ஆலிம் M.அப்துல் ஹகீம்,மன்பஈ,
கல்மேடு,மதுரை மாவட்டம்

மவ்லவி ஆலிம் S. அப்துல் மஜீது,மன்பஈ,
தென்காசி, நெல்லை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A. சிராஜுத்தீன், மன்பஈ,
மகாராஜபுரம், விருதுநகர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் N.A. முனவ்வர் ஹுசைன் மன்பஈ,
கொள்ளுமேடு கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M. ஷேக் பரீத், மன்பஈ,
சித்தயன்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்

மவ்லவி ஆலிம் S. முஹம்மது ரில்வானுல்லாஹ், மன்பஈ,
இராஜகாப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்

மவ்லவி ஆலிம் A.J.முஹம்மது மஅரூஃப், மன்பஈ,
ஆயங்குடி கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.K. அப்துல் ஃபத்தாஹ், மன்பஈ,
கொப்பனாபட்டி புதுகை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M.A.முஹம்மது கஸ்ஸாலி, மன்பஈ, லால்பேட்டை கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் S. பைஜுர் ரஹ்மான், மன்பஈ,
கொள்ளுமேடு கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் A.M.ஷம்சுத்தீன்,மன்பஈ,
லால்பேட்டை கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் B.ஹலீல் அஹ்மது மன்பஈ,
லால்பேட்டை கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் M. இம்தாதுல்லாஹ் பேக், மன்பஈ,
கீழ்புவனகிரி கடலூர் மாவட்டம்

Wednesday, March 17, 2010

அழகிய பள்ளிவாயில்

நான் இரசித்த நகைச்சுவை

ஒரு அரசியல்வாதி மேடையில் பேசினான் பேசினான் பேசிகொன்டே இருந்தான்,

கடைசியாக பெசி முடிக்கும் பொழுது நான் கடிகாரம் கட்டிவரவில்லை, ஆகையால் நேரம் அரியாமல் நீன்டநேரம் பெசிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கூறினான்,

அதற்கு எதிரில் அமர்ந்திருந்தவன் கூரினான்

ஏன்யா கடிகாரம்தான் கட்டி வரவில்லை, எதிரில் மாட்டிருக்கும் காலண்டர்கூடவா உன் கண்ணுக்கு தெரியல என்றான்,


அன்புடன் முஹம்மது